உங்கள் வருகைக்கு நன்றி

குழந்தைகள் ஸ்மார்ட்ஃபோன், டேப்லெட் போன்ற கருவிகளை பயன்படுத்துகிறார்களா ?

வெள்ளி, 5 மே, 2017

எவ்வளவு அதிகமாக குழந்தைகள் ஸ்மார்ட்ஃபோன்டேப்லெட் போன்ற கருவிகளை பயன்படுத்துகிறார்களோஅதற்கேற்றார் போல அவர்கள் பேசும் திறன் தள்ளிப்போகும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

வீடியோ,https://www.facebook.com/abdul.hakeem.391420/videos/1405627549517584/

இந்த ஆய்வில், 30 நிமிடங்களுக்கு அதிகமாக கையில் ஸ்மார்ட்ஃபோன் போன்ற கருவிகளை வைத்திருக்கும்போது, அவர்கள் தெளிவாக பேசும் திறன் 49% தள்ளிப்போகிறது என தெரியவந்துள்ளது.
இதுகுறித்து பேசிய, கனடாவைச் சேர்ந்த குழைந்தைகள் நல மருத்துவர் கேத்தரின் பேர்கென், "இன்று எல்லோரிடமும் கையில் ஒரு கருவி இருக்கிறது. குழந்தைகள் நலனுக்கான புதிய வழிகாட்டுத்தல்களில், குழந்தைகள் மொபைல் போன்ற கருவிகளை பார்க்கும் நேரம் குறைய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இளம் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் ஸ்மார்ட்ஃபோன் கருவிகளை பயன்படுத்துவது வழக்கமாகிவிட்டது. இப்போதுதான் முதல் முறையாக, அவர்கள் மொபைல் பயன்படுத்தும் நேரத்துக்கும், பேசும் திறனுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது" என்றார்.
அதே நேரத்தில், குழந்தைகள் மற்றவர்களுடன் பேசுவது, உடல் மொழி, சைகை போன்றவைக்கும், மொபைல் கருவிகள் பயன்பாட்டுக்கும் தொடர்பு இல்லை என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வு முடிவுகள், சான்பிரான்ஸிஸ்கோவில் நடந்த குழந்தைகள் நல மருத்துவ கல்வி சங்கங்களின் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
6 மாதங்கள் முதல் 2 வயது வரை இருக்கும் 894 குழந்தைகள் இந்த ஆய்வுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களது பெற்றோரிடம் பேசிய போது, 20 சதவித குழந்தைகள், தினமும் சராசரியாக 28 நிமிடங்கள் மொபைல், டாப்லெட் போன்ற கருவிகளை பயன்படுத்தினார்கள் என தெரியவந்துள்ளது.
குழந்தை பிறந்து 18 மாதங்களுக்கு, அவர்கள் மொபைல் போன்ற கையடக்க கருவிகளின் திரையை பார்க்கக்கூடாது என அமெரிக்காவில் இருக்கும் குழந்தைகள் நல அகாடமி சமீபத்தில் பரிந்துரைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets