உங்கள் வருகைக்கு நன்றி

கலங்க வைக்குது "கட்டிப்பிடி' கலாசாரம்

புதன், 30 ஜனவரி, 2013


தமிழகத்தில் பொது இடங்களில் பரவி வரும், "கட்டிப்பிடி' கலாசாரம் இளைய சமுதாயத்தை பாழாக்கி வருகிறது.

கலாசாரத்தில் தோய்ந்த நம் பண்பாட்டை சீரழிக்கும் விதமாக, சென்னை போன்ற பெரு நகரங்களில் பெருகி வரும் பைக் காதல், பீச், பார்க் மறைவிட காதல்களால், மாணவ, மாணவியர் தவறான பாதைக்கு செல்லக் கூடிய அபாயகரமான சூழல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில் இது போன்ற நிலை அதிகம் இருப்பதால், எங்கே தங்கள் மகனும், மகளும் இதே போன்றதொரு நிலைக்கு சென்று விடுவார்களோ என பெற்றோர் அஞ்சுகின்றனர். சென்னையைப் பொறுத்தவரை, சாலைகளில் செல்லும் போது, சிலர் துப்பட்டாவால் முகம் முழுவதையும் மூடிக் கொண்டும், சிலர் ஹெல்மட் அணிந்து முகத்தை மறைத்துக் கொண்டும், சிலர் வெளிப்படையாகவும், முன்னே ஓட்டிச் செல்லும் இளைஞரை இறுக்கி அணைத்தபடியும், அசிங்கமாக சேட்டைகள் செய்தபடியும் செல்கின்றனர்.

இதே போல், தினமும், சென்னை மெரீனா, பெசன்ட் நகர் பீச்களில், இரவு வேளைகளில் மட்டுமல்லாது, மாலை வேளைகளிலும், பகலிலும் மொட்டை வெயிலில் அமர்ந்து கொண்டு பலர், காதலர்கள் என்ற போர்வையில், பட்டவர்த்தனமாக, மற்றவர்களின் பார்வையில் படும்படி ஆபாச செய்கைகளில் ஈடுபடுவதை காணலாம். போதா குறைக்கும், இது போன்ற (கள்ள)காதலர்களின் அட்டகாசம் உயிரியல் பூங்கா, சிறுவர் பூங்கா போன்ற பூங்காக்கள், நினைவு மண்டபங்கள், ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத இடங்கள், புதர் மறைவுகளிலும் அதிகம் காணப்படுகிறது.

இது போன்ற அசிங்கங்களில் ஈடுபடுவோருக்கு தங்களைப் பற்றியும் கவலை இல்லை. தங்கள் பெற்றோர் மற்றும் உறவினர்களைப் பற்றியும் கவலை இல்லை. இது போன்ற அசிங்கங்களை போலீசாரும் அவ்வளவாக கண்டு கொள்வதில்லை. மற்றவர்கள் தங்களைப் பார்க்கும் போது, அவர்கள் மனதில் தேவையற்ற சஞ்சலம் ஏற்படுமே என்பதையும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. இதனால், இளைய சமுதாயத்தினர் மன ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக மாணவ, மாணவர்கள் மத்தியில் இது போன்ற நிகழ்வுகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதை பார்க்கும் அவர்கள், தாங்களும் இதே போன்று நடந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் தவறு செய்ய நேரிடுகிறது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, இனியேனும் பொது இடங்களில் வரம்பு மீறி நடந்து கொள்பவர்களுக்கு அரசும், போலீசாரும் உரிய கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். இல்லையெனில், ஏற்கனவே "டிவி', சினிமா, ஆபாச புத்தகங்களால் பாதிக்கப்பட்டுள்ள இளைய தலைமுறையினர் தடம்மாறிப் போக வாய்ப்பு ஏற்பட்டு விடும்.

Read more...

முழு பொறுப்பு பெற்றோருக்கு மட்டுமே உள்ளது.


பீச், பார்க்குகளில் குடைக்குள் புகுந்தபடியும், பைக்கின் பின் துப்பட்டா மறைவில் காதல் செய்யும் காதல் ஜோடிகள் நமக்கு பல ஆண்டுகளாக பழக்கம்.
ஆனால், சென்னையில் கடந்த சில வருடங்களாக இவ்வாறு மறைந்து இருக்கும் பெண்களில் பலர் பள்ளிக் குழந்தைகள் என்பது தான் அதிர்ச்சியளிக்கக் கூடிய விஷயம்.
முன்பெல்லாம் பார்க், பீச்சுகளில் விளையாட மட்டுமே வந்த இந்த பள்ளிக் குழந்தைகள் இப்போது காதல், செக்ஸ் என்ற மாயவலையில் சிக்கி வருகிறார்கள். அதோடு மட்டும் இல்லாமல் அதை விட ஒரு படி மேலே கருக்கலைப்புக்கு வந்து  நிற்கிறார்கள் இந்த யூனிபார்ம் அம்மாக்கள்.
சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா போன்ற மெட்ரோ சிட்டியில் ஒருநாளில் 2 லட்சம் கருத்தடை மாத்திரைகள் விற்பனையாகி வருவதாக புள்ளி விவரம் தெரிவிக்கும் அதே நேரத்தில் இந்த விற்பனையில் சிங்காரச் சென்னைநம் பர் 1 இடத்தில் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிலும், அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது மாணவச் சமுதாயமே என்பது கவலை தரும் அம்சம்.
இது பற்றி மனநல ஆலோசகர் டாக்டர் சொல்கிறார்கள்.‘‘இந்த பருவ நிலை காதலுக்கு ஹார்மோன் கோளாறு என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிட முடியாது. அதையும் தாண்டி... சுற்றுப்புற சூழல், குடும்ப நிலை மற்றும் பெற்றோர் களின் வளர்ப்பு முறை என எல்லாவற்றையும் சார்ந்தது.
அப்பா அம்மா இருவரும் வேலைக்கு போகும் சூழலில் தான் இப்போது உள்ள குழந்தைகள் வளர்கிறார்கள். வேலையில் உடன் பணியாற்றும் சக ஆண் நண்பருடன் வெளியே செல்வது, போனில் பேசுவதை பார்த்து வளரும் குழந்தைகள்  தடம் மாறிப்போக ஒரு காரணமாகிறது. 
இப்போது பெரியவர்கள் முதல் டீன் ஏஜ் குழந்தைகள் வரை எல்லாரையும் கட்டிப் போட்டுள்ளது செல்போன். கேமரா, மெமரி கார்டு, ஈமெயில், படங்களை டவுண்லோட் செய்வது என பல வசதிகள் கொண்ட  செல்போன் மார்க்கெட்டில்  உள்ளது. இதன் பயன்பாட்டுக்கு பிறகு, குழந்தையின் குழந்தைத்தன்மை தூக்கி எறியப்படுகிறது. மேலும் அவர்களின் உணர்வு வெளிப்பாடுகள் மற்றும் அசாத்திய மனநிலை மாற்றங்கள் நம்ப முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளன.  
குழந்தைகள் ஒரு களிமண். அதை நாம் அழகான ஒரு பொம்மையாக மாற்றி அமைக்கலாம். அதன் முழு பொறுப்பு பெற்றோருக்கு மட்டுமே உள்ளது.

பெற்றோர்களே காரணம்

மனோகரன் (போலீஸ் அதிகாரி) கடந்த வாரம் ஒரு இளம் ஜோடியை பிடித்து காவல்  நிலையத்திற்கு அழைத்துச் சென்றோம். இருவரது பெற்றோர்களுக்கு தகவல் அனுப்பி ஸ்டேஷன் வரச் செய்தோம். அவர்கள் கூறியதை கேட்டு திடுக்கிட் டோம். ‘‘என்ன சார் இது சிம்பிள் மேட்டர். என்னமோ திருடனைப் பிடித்தது போல சொல்கிறீர்கள். இந்த பிரச்னையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்‘‘ என்று கூறியதோடு அந்த மாணவர்களை பெற்றோர்கள் தங்களுடன் அழைத்துச்  செல்லாமல்  வீட்டுக்கு போங்கள், எங்களுக்கு வேலை இருக்கிறது என்று கூறி சென்றனர்.  பெற்றோர்கள்  மனது வைத்தால் மட்டுமே இந்த பிரச்னைக்கு முடிவு கிடைக்கும்.

மனரீதியில் பாதிப்பு...
சரஸ்வதி (அரசு பள்ளி ஆசிரியர்) பொதுவாக தனியார் பள்ளியில் இம்மாதிரி பிரச்னை அதிக அளவில் இருப்பதில்லை. அரசு பள்ளியில் மட்டுமே இந்த நிலை அதிகம் இருக்கிறது. கடந்த வாரம் எனது பள்ளி மாணவ  மாணவி ஜோடி அதி காலையில் சீருடையுடன் பீச் சென்றுள்ளனர். அவர்கள் 4வது முறையாக போலீஸ்  வசம் பிடிபட்டுள்ளனர். கடந்த 3 முறை பெற்றோர் இடத்தில் சொல்லி பயனில்லை என்பதால் பள்ளிக்கு தகவல் அனுப்பினர். அவர்களை பள்ளிக்கு வரச்  செய்து  இருவரையும் தனித்தனியாக விசாரித்தேன். அப்போது மாணவி கூறியது கேட்டு திடுக்கிட்டேன். மாணவி கூறியதாவது:
‘‘பிழைப்பை தேடி கிராமத்திலிருந்து நாங்கள் சென்னை வந்துள்ளோம். தாய், தந்தை இருவரும் மரம் வெட்டும் வேலை செய்கின்றனர். காலை 7 மணிக்கு வேலைக்கு சென்றால் இரவு 8 மணிக்குதான் வீடு திரும்புவார்கள். நான்தான்  சமையல் செய்வேன். காலையில் செய்யும் சாப்பாட்டை இரவிலும் சாப்பிடுவேன்.
மதியம் பள்ளியில் சாப்பிடுவேன். தனிமையாக இருப்பதால் ஆதரவின்றி இருப்பதாக உணருகிறேன். உடல் நிலை சரியாக இல்லாத நேரத்திலும் பெற்றோர்கள் வேலைக்கு செல்வதால் மனரீதியாக பாதிப்படைகிறேன். சக மாணவர் என்மீது  அதிக அக்கறை செலுத்துவதால் அவன் மீது பாசம் வைத்துள்ளேன். பீச் செல்வது தவறு என்று தெரிந்தும் என்னால் அவனுடன் செல்வதை தவிர்க்க முடியவில்லைஎன்றாள்.
எனவே, இந்த பிரச்னைக்கு காரணம் பெற்றோர்களே. தனியார் பள்ளிகளில் பல கட்டுப்பாடுகள் உள்ளன. பெற்றோர்கள் படித்தவர்களாக இருக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து தங்களது பிள்ளைகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. ஆனால், அரசு பள்ளிகளில் அப்படி இல்லை. மதிய உணவுக்காக பிள்ளைகளை படிக்க வைப்பவர்கள் இன்னும் இருக்கத்தான செய்கின்றனர். அந்த நிலை மாறினால் மட் டுமே இது போன்ற பிரச்னை முடிவுக்கு வரும்.

Read more...

மின்னல் கோபமும் புயல் கோபமும்

செவ்வாய், 29 ஜனவரி, 2013

சில நாள்களுக்கு முன் ஓர் ஆட்டோவில் பயணிக்க நேர்ந்தது. ஓட்டுநர் நடுத்தர வயதினர். நிதானமாகவே வண்டியைச் செலுத்தினார். அப்போது ஒரு பக்கத்துத் தெருவிலிருந்து திடீரென்று குறுக்கே பாய்ந்த ஒரு மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி ஆட்டோவின் மீது லேசாக மோதியது. அதில் வந்த இரு இளைஞர்கள் தமது தவறை மறைப்பதற்காக ஆட்டோ ஓட்டுநரைக் கேவலமாக ஏசியதுடன் முஷ்டியை உயர்த்தித் தாக்கவும் முயன்றார்கள்.
 ஓட்டுநர் பதறாமல் ""சரி தம்பிகளா, தெரியாமல் நடந்து போச்சு! போங்க!'' என்று சொல்லியவாறு வண்டியைக் கிளப்பிக்கொண்டு போனார்.
 எனக்கு வியப்பு மேலிட்டது. ""தப்பு செய்தது அவர்கள், ஏச்சு வாங்கியது நீங்கள். சூடாகப் பதில் கொடுத்திருக்கலாம்'' என்றேன்.
 ""அய்யா, நான் இந்தப் பேட்டைக்காரன்தான். இங்கு என் உறவுகள் அதிகம். நான் வண்டியை விட்டு இறங்கி ஒரு குரல் கொடுத்தால் போதும். பெரிய கூட்டமே வந்து அந்தப் பையன்களைத் துவட்டி எடுத்து விடுவார்கள். அப்புறம் என்ன ஆகும்? அந்தப் பையன்கள் தம் பேட்டையிலிருந்து தமது ஆள்களை அழைத்து வந்து தகராறு செய்வார்கள். அடிதடி நடக்கும். அது பெரிய மதக்கலவரமாக வளர்ந்துவிடும். போலீஸ் வரும். தடியடி, துப்பாக்கிச் சூடு, நாலைந்து பேர் சாவு, 144 தடை உத்தரவு என்று தொடர்கதையாக நீளும். இதையெல்லாம் யோசித்துப் பார்த்துத்தான் நான் அடங்கிப் போனேன். இப்போது யாருக்கும் நஷ்டமில்லை, சேதமுமில்லை.''
 ""உங்களுக்குக் கொஞ்சம்கூடக் கோபம் வரவில்லையா?''
 ""வந்தது, பெருங்கோபம் வந்தது. அது மின்னல் கோபம். வந்த வேகத்தில் மறைந்தும் போயிற்று''.
 ""அது என்ன மின்னல் கோபம்?'' என்று கேட்டேன்.
 ""நம் உடம்பில் சாதுவான ஈயோ, கருப்பு எறும்போ ஏறினால் நாம் கோபப்படாமல் அதை ஊதித் தள்ளுவோம். ஆனால், கொசுவோ சிவப்பு எறும்போ ஏறினால் சும்மாயிராமல் சுரீர் என்று கடிக்கும். நாம் முன்பின் யோசியாமல் அல்லது நம்மையும் அறியாமல் அதைப் பட்டென்று அடித்துக் கொல்வோம். அதற்குக் காரணம் சட்டென ஏற்படும் மின்னல் கோபம்! அது உடனடியாக மறந்து போகும்.
 ""அப்போ புயல் கோபம் என்றும் ஒன்று உண்டோ?''
 ""உண்டு. முதலில் சிறிய காற்றழுத்த மண்டலம் என்று ஆரம்பிப்பது படிப்படியாக வலுவடைந்து பெரிய சூறாவளியாக மாறும். அதேபோல மக்களுக்குச் சிறு சிறு குறைகளும் கோபதாபங்களும் அதிருப்திகளும் ஏற்பட்டு அவை வளருமானால், ஒருநாள் அவர்கள் பொங்கி எழுந்து புரட்சி செய்து அரசாங்கத்தைக் கவிழ்த்து விடுவார்கள். அரேபியாவில் இப்போது அதுதான் நடக்கிறது. இதிலே வேடிக்கை என்னவெனில் அந்தப் புரட்சிப் புயலுக்கு அரேபிய வசந்தம் என்று பெயரிட்டிருப்பதுதான்!'' என்று சொல்லிச் சிரித்தார்.
 எனக்கு கூடால் என்ற பெண் ஆய்வரின் பதிவுகள் நினைவுக்கு வந்தன. அவர் ஆப்பிரிக்கக் காடுகளில் வசிக்கும் சிம்பன்சி குரங்குகளின் வாழ்வியலை ஆராய்ந்தவர். பல ஆண்டுகள் அவற்றின் கூடவே தங்கித் தம்மில் ஒருவராக அவற்றால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர். ஒருமுறை இரண்டு சிம்பன்சி கூட்டங்களுக்கிடையில் நிகழ்ந்த எல்லைத் தகராறை அவர் விவரித்திருக்கிறார். ஒரு கூட்டம் தமது எல்லைக்குள் வந்துவிட்டதைக் கண்ட மற்ற கூட்டம் ஒன்றாகக் கூடிக் காடே அதிரும்படி கூச்சலிட்டுக் கிளைகளில் தாவியும் பாய்ந்தும் ஆரவாரம் செய்தது. எல்லை தாண்டி வந்த கூட்டமும் பதிலுக்கு ஆர்ப்பரித்தது. சில நிமிஷங்களுக்கு இருதரப்பும் மாறி மாறி லாவணி பாடியபின் முதல் கூட்டம் பின்வாங்கியது. காட்டில் அமைதி திரும்பியது. எதிரிகளைத் துரத்திக்கொண்டு போய்த் தாக்கும் வன்மப் போக்கு சிம்பன்சிக்களிடம் தென்படுவதில்லை. எல்லாம் கத்தியின்றி ரத்தமின்றிக் கத்தி போடும் யுத்தம்தான்.
 முன்கோபிகள் என்று பெயர் பெற்ற மலைக்கொரில்லாக்கள் கூட வன்முறைக் கைகலப்புகளில் ஈடுபடுவதில்லை. தலைவர் கொரில்லா எழுந்து நின்று மார்பைத் தட்டிக் கூச்சல்போட்டே எதிரிகளை விரட்டி விடும். மனிதர்கள் மட்டும்தான் பழைய தீங்கிழைப்புகளை மறக்காமல் மனதில் தேக்கி வைத்துக்கொண்டு வாய்ப்புக் கிடைக்கிறபோது பழிவாங்கும் குணமுடையவர்களாக இருக்கிறார்கள்.
 தமது செயல்களுக்குப் பின்விளைவுகளும் எதிர்விளைவுகளும் தொடர்கதையாக நீளலாம் என்பதை ஒரு கணம் நின்று நிதானித்துச் செயல்பட்டால் பல சேதங்களும் மரணங்களும் தவிர்க்கப்படும். மதம், நாடு ஆகியவற்றின் பெயரில் கொன்றும் கொல்லப்பட்டும் தியாகிப் பட்டம் பெறவே பலர் விரும்புகிறார்கள்.
 மின்னல் தாக்கிக் காடே அழிந்து போகிறது. மின்னல் கோபமும் ஒரு பொறியாகிப் பெரும் சேதமேற்படுத்த முடியும். 2010, டிசம்பர் 17-ம் நாள் டுனீசியாவில் முகமது பாவாசிசி என்ற பழ வண்டி வியாபாரியை ஒரு பெண் போலீஸ் காவலர் கன்னத்தில் அறைந்துவிட்டாள். அவமானத்தால் பாவாசிசி மனமுடைந்து நடுத்தெருவில் தீக்குளித்து விட்டான். அந்தச் சம்பவம் அக்கினிக் குஞ்சாக அமைந்து டுனீசியாவின் சர்வாதிகாரியை விரட்டியது. அத்துடன் நில்லாமல் எகிப்து, லிபியா, சிரியா என மற்ற அரேபிய அரசாங்கங்களையும் கவிழ்த்தது.
 1914-ம் ஆண்டில் செர்பிய தேசியவாதிகள் ஆஸ்திரிய இளவரசரான பிரான்ஸ் பெர்டினாண்டைச் சுட்டுக் கொன்றதன் பின்விளைவாக முதல் உலகப் போர் மூண்டு பல லட்சம் மக்களைப் பலி வாங்கியது. இரண்டாவது, உலகப் போரின்போது ஜப்பானியத் தளபதிகள் முன்யோசனையின்றி பேர்ல் ஹார்பரைத் தாக்கியழித்ததால் அதுவரை போரில் தலையிடாமல் ஒதுங்கியிருந்த அமெரிக்கா வெகுண்டெழுந்து அணுகுண்டுகளை வீசி லட்சக்கணக்கான மக்களைச் சுட்டுப் பொசுக்கியது.
  

Read more...

டிவி தொடர்கள் கொஞ்சம் கொஞ்சமாக நஞ்சை விதைத்து கொண்டு இருக்கிறது.

ஞாயிறு, 27 ஜனவரி, 2013


அனைத்து தனியார் டிவிகளும் பெண்களை எவ்வளவுக்கு எவ்வளவு கொச்சைப்படுத்த முடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு நான் நீ என போட்டி போட்டு கொண்டு செய்து வருகின்றன. ஏதோ இன்றைய பெண்கள் பணம் சம்பாதிப்பதற்காக தகாத உறவை வைத்துக்கொள்ள தயங்க மாட்டார்கள் என்பது போல் சித்தரிக்கப்படுகின்றன.

சமுதாயத்தில் முன்னேறியுள்ள பெண்கள் இதனை ஒடுக்க எதிர்ப்பு காட்டாமல் இன்னும் ஏன் மௌனமாக இருக்கிறார்கள் என்பது புரியவில்லை. அகவே இப்படிப்பட்ட இழிவான தொடர்களை ஒளிபரப்பும் சேனல்கள் தாங்களாகவே முன் வந்து அதனை குறைத்துக்கொள்ள வேண்டும்.

இது விரைவான உலகம். விரைவாக பணக்காரியாக வேண்டுமென கொள்ளை ஆசை எல்லா பெண்களின் மனதிலும் புகைந்து கொண்டு இருக்கிறது. இப்படி எல்லாம் சென்றால் சீக்கிரமாக அனைத்து வசதிகளோடு சுகபோகமாக வாழலாம் என டிவிகளில் வரும் தொடர்களில் காட்டும் போது அவை அவர்களை தூபம் போடுவது போல் ஆகிவிடுகிறது.

சில பெண்கள் அத்தகைய சந்தர்ப்பம் கிடைக்கும் போது அவர்களின் மனம் மாறிட வாய்ப்பு உள்ளது. ஆணுக்கு சம்பாதிப்பது மட்டுமே வேலை. ஆனால் குடும்பத்தையும், பிள்ளைகளையும் கவனிப்பது பெரும்பாலும் பெண்களின் பொறுப்பாக உள்ளது.

கணவன் குடும்பத்தை சரியாக கவனிக்காமல் போனால் குடும்பம் பெரும் நஷ்டத்தில் அகப்பட்டு சீரழியும் சமயத்தில் சீரியலில் பெண் தகாத தொழில் செய்து குடும்பத்தை காப்பாற்றுவது போல வரும் காட்சி தான் அந்த தருணத்தில் அவள் முன் வந்து நிற்கும். அவளும் அதுபோல தடம் மாற முற்படலாம்.

பெரும்பாலும் தொடர்களை பார்ப்பது எல்லாம் வேலைக்கு போகாத வீட்டிலுள்ள பெண்கள்தான். கணவன், மனைவிக்குள் சின்ன பிரச்சனை வந்தாலும் தொடரில் தற்கொலை செய்து கொள்வது போல வந்தால்  அதுபோல் தற்கொலை செய்து கொள்ள முற்படுவாள்.

இல்லையேல் கணவனை பழிவாங்குவது போல் காட்சி வந்தால் அவை மாதிரியே கணவனை கொல்ல முற்படுவாள். சிறுவயதில் பெண்கள் தொடரை காணும் போது அதில் இளம்பெண்கள் பல ஆண்களோடு சோர்ந்து சுற்றுவதுபோல காட்சி வந்தால் தானும் பிற்காலத்தில் வளர்ந்து பெரியவளாகும் போது அவ்வாறு செய்ய  வேண்டுமென மனதில் பசுமரத்து ஆணிப்போல் பதித்து விடும்.

இறுதியில் அதுபோல செயல்பட முற்படுவார்கள் சில இளவட்ட இளைஞிகள். சீரியலில் லவ்வுதான் பிரதானமானது  என காட்டும்போது வாழ்கைக்கு அவை தான் அவசியமென பிள்ளைகளின் மனதில் தொற்றிக் கொள்கின்றனர். இறுதியில் அவர்கள் வயது வித்தியசமின்றி காதலிக்க ஆரம்பித்துவிடுகின்றனர்.

பெண்கள் தான் குடும்பத்தின் ஆணிவேர். இவர்களிடம் டிவி தொடர்கள் கொஞ்சம் கொஞ்சமாக நஞ்சை விதைத்து கொண்டு இருக்கிறது. இறுதியில் அவள் கெடும் போது குடும்பம், சமுதாயம், நாடு என அனைத்தும் சிதைத்து போய் பாழாய் போக போவது உறுதி. தொடர்களால் பெண்கள் சீரழிவது உண்மை என்பது புலனாகிறது. ஆகவே மத்திய அரசு இவற்றிற்கு விரைவில் கடிவாளம் இட்டால் நல்லது. அதுவரை நாம் டிவி சீரியலுக்கு கடிவாளம் அவசியம் போட்டு வைப்போம்.

Read more...

தம்பதிகளுக்கு குழந்தை பிறக்கவில்லை எதனால்?

செவ்வாய், 8 ஜனவரி, 2013


இந்தியாவில் 10 கோடி தம்பதிகளுக்கு குழந்தை இல்லை. இதற்குஉடல்பருமனே முக்கிய காரணம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நமது சமூகத்தில் அம்மாவான பெண்களுக்கு தரப்படும் மரியாதை குழந்தை இல்லாதவர்களுக்கு கிடைப்பதில்லை. இதனால்மணமாகி ஓரிரண்டு ஆண்டுக்குள் குழந்தை பிறக்காத பெண்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பாதிக்கப்படுகின்றனர். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே பிரச்னைகள் ஏற்படுகிறது.

சிலர் இந்த காரணத்தால் விவாகரத்து செய்து கொண்டுஇரண்டாவது திருமணம் செய்து கொள்கின்றனர். பெண்கள் குழந்தை பாக்கியம் வேண்டி பல இடங்களுக்கு செல்வதையும் அனைத்து ஊர்களிலும் காண முடிகிறது. மருத்துவமனைகளுக்கு சென்று டாக்டர்களிடமும் சிகிச்சையும் ஆலோசனையும் பெறுகின்றனர். இந்நிலையில்இந்தியாவில் 10 கோடி தம்பதிகளுக்கு குழந்தை இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து மகப்பேறு மருத்துவமனை மருத்துவர்கள் கூறியதாவது:

நாட்டில் குழந்தையின்மை பிரச்னை பரவலாக காணப்படுகிறது. இதற்கு உடல் பருமன்தான் முக்கியமான காரணம். ஃபாஸ்ட்புட்பீசாபர்கர் போன்ற செயற்கை உணவு முறைகளை உட்கொள்கின்றனர். வெளிநாட்டு கலாசாரத்திற்கு மக்கள் மாறிவருகின்றனர். உணவு கட்டுப்பாடு இல்லை. உடற்பயிற்சி செய்வது இல்லை. இதனால்உடல் பருமன் அதிகரிக்கிறது. அதனால் பெண்களுக்கு மாதம் தோறும் கருமுட்டை வெளியேறுவது தடைபடுகிறது. இதன் காரணமாக பெண்கள் கருத்தரிக்க முடியவில்லை.

ஆனால் குழந்தையின்மைக்கு பெண்கள் மட்டுமே காரணம் என்று சொல்லிவிட முடியாது. ஆண்களும் காரணமாக இருக்கின்றனர். உடல்பருமனால் ஆண்களின் விந்தணுக்களில் உயிரணு குறைகிறது.  இதே போல்அதிக அளவில் செல்போன்கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள்டிவி பார்ப்பவர்கள் கதிர் வீச்சு பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இவர்கள் மனதளவிலும் பாதிப்படைகின்றனர். இதனாலும்குழந்தை பிறப்பு தடைப்படுகிறது என்ற தகவல் அறிவியல் ரீதியில் சொல்லப்படுகிறது.

நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்ற காரணத்தால் காலம் தாழ்த்தி (30 வயதிற்கு மேல்) திருமணம் செய்வதுகொஞ்ச நாள் ஜாலியாக இருக்கலாம் என்ற காரணத்தால் குழந்தை பிறப்பை தள்ளிப்போடுவதுகரு கலைப்பது போன்றவைகளும் குழந்தையின்மைக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

ஆரோக்கியமான குழந்தைக்கு

ஆண்கள் 25 வயதிலும்பெண்கள் 21 வயதிலும் முடிந்த அளவு திருமணம் செய்து கொள்ள வேண்டும். திருமணத்திற்கு பிறகு குழந்தை பிறப்பு வரை டாக்டரிடம் தொடர்ந்து ஆலோசனை பெற வேண்டும். உணவு முறைகளில் கட்டுப்பாடு வேண்டும். உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்கிறார்கள் டாக்டர்கள்.

Read more...

நம்மால் இதை விடவே முடியாதா ?

ஞாயிறு, 6 ஜனவரி, 2013


கண்கள் உலர்ந்து போதல்கண்களில் அரிப்புஎரிச்சல்சோர்வுதலைவலிபார்வைக் கோளாறு...
 இவையெல்லாம் கம்ப்யூட்டரில் அதிக நேரம் வேலை பார்ப்பதால் ஏற்படும் அறிகுறிகள். நிலத்தில் பாடுபடும் விவசாயி கூட நிலத்தைவிட்டு விட்டு வேறு வேலைக்குப் போய்விடலாம். ஆனால் கம்ப்யூட்டரை நாம் விடவே முடியாது போலிருக்கிறது.
 கண்களை விற்றுச் சித்திரம் வாங்குவதை விட மோசமானதுகண்களைக் கெடுத்துக் கொண்டு கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பது. கண்ணும் கெடாமல்கம்ப்யூட்டரையும் விடாமல் இருக்க என்ன செய்வது?
 *  மானிட்டரை உங்கள் முகத்திலிருந்து 20 அங்குல தூரத்துக்கு அப்பால் வையுங்கள். மானிட்டர் 20 டிகிரி சாய்வாக இருக்கட்டும்.
 *   ஜன்னல் பக்கத்தில் மானிட்டர் இருந்தால் வெளி வெளிச்சமும்கம்ப்யூட்டர் மானிட்டர் வெளிச்சமும் கண்களைக் கூச வைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
 *   கம்ப்யூட்டர் முன் அமர்ந்தால் கண்களை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருப்பீர்கள். அதனால் கண்கள் உலர்ந்துவிடும். எனவே அவ்வப்போது கண்களை மூடித் திறங்கள்.
 *  20 - 20 - 20 விதியைக் கடைப்பிடியுங்கள். அதாவது 20 அங்குல தூரத்தில் மானிட்டர் இருக்க வேண்டும்.
 20 நிமிடத்துக்கு ஒருமுறை கம்ப்யூட்டர் மானிட்டரைப் பார்க்காமல் 20 வினாடிகள் கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.
 *  எல்லாவற்றுக்கும் மேலாக ஃபாஸ்ட் ஃபுட்டை ஒரு பிடி பிடிக்காமல்கண்களுக்கு வளம் சேர்க்கும் உணவு வகைகளைச் சாப்பிடுங்கள்.

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets