உங்கள் வருகைக்கு நன்றி

சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான்

ஞாயிறு, 29 ஜனவரி, 2012


இந்தியாவில் தற்போது இருக்கும் மின்பற்றாக் குறையைவிட 2020-ல் இரு மடங்கு அதிகமாக இருக்கும் என ஆய்வுகள் சொல்கின்றன. இதற்கொரு தீர்வாக சூரிய சக்தியிலிருந்து மின்சாரத்தை தயாரிப்பது மிக அவசியமாகிறது. வெப்ப மண்டல நாடான இந்தியாவில் ஆண்டுக்கு 250-300 நாட்கள் சுமார் 3,000 மணி நேரம் சூரியஒளி கிடைக்கிறது. இதனைக் கொண்டு 5,000 டிரில்லியன் கிலோவாட் ஹவர் சூரியசக்தி ஆண்டு முழுவதும் தடையின்றி கிடைக்கும்.

      

இதனைக் கொண்டு மிகப் பெரிய அளவில் நம்மால் மின்சாரம் தயாரிக்க முடியும். வெறும் 250 நாட்கள் மட்டுமே சூரியஒளியைப் பெறும் ஃபிரான்ஸும்ஜெர்மனியும் சுமார் 9,000 மெகாவாட் மின்சக்தியை உற்பத்தி செய்கிறது. ஆனால் ஆண்டுக்கு 300நாட்கள் வரை சூரியஒளி பெறும் நாமோவெறும் 12 மெகாவாட்டுக்கும் குறைவாகவே உற்பத்தி செய்கிறோம். வீட்டுக்குத் தேவையான மின்சாரத்தையும் சிறிய அளவிலான கருவிகள் மூலம் உற்பத்தி செய்யலாம். வீட்டில் பயன்படுத்தும் சோலார் சாதனங்களைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை. மின்சாரம் இன்னும் கிடைக்காத கிராமங்கள் இந்தியாவில் உள்ளன. அங்கெல்லாம் சோலார் சாதனங்களைப் பயன்படுத்தி பலன் பெறலாம். சோலார் சக்தியின் பயன்பாடு நாடு முழுவதும் உடனே செயல்படுத்த வேண்டியது அவசியம்மும் அவசரமும் ஆகும். மாறாக தாமதித்தால் மின்சாரத்தினால் ஏற்படும் பாதிப்பு அனைத்து துரைகளிலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

Home Solar Power Systems  

நாடு தழுவிய அளவில் மின் பற்றாக்குறை நிலவுகிறது. மின்தடை பிரச்னையில் இருந்து நிரந்தரமாக விடுபடுவதற்கு தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி முகமை (டெடா) அறிமுகப்படுத்தியுள்ள "ஒரு கிலோ வாட் சோலார் பவர் பேக்திட்டம் தற்போது வீட்டு உபயோகத்திறகு கைகொடுக்கிறது. வீடுகள் மற்றும் நிறுவனங்களில் மின்தடை ஏற்பட்டால் தற்போது "இன்வெர்ட்டர்கள்பயன்படுத்தப்படுகின்றன. இவற்றால் மூன்று மணி நேரம் மட்டுமே தொடர்ந்து செயல்பட முடியும். ஆனால்ஒரு கிலோ வாட் சோலார் பவர் பேக் மூலம் தொடர்ந்து 16 மணி நேரம் மின்சாரம் பெற முடியும். இதற்கான சோலார் அமைப்பை ஏற்படுத்த2.2 லட்சம் ரூபாய் செலவாகும். நாள் ஒன்றுக்கு எட்டு யூனிட் மின்சாரம் இதன் மூலம் உற்பத்தி செய்ய முடியும். வீடுகளில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து மின்சார பொருட்களையும் இந்த மின்சாரத்தால் இயக்க முடியும். சோலார் அமைப்பை ஏற்படுத்த 65 சதுர அடி இடம் தேவை. சாதாரணமாக பயன்படுத்தும் மின்சார செலவை ஒப்பிடுகையில்சோலார் அமைப்பை ஏற்படுத்திய எட்டு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கும் மின்சாரம் லாபக்கணக்கில் வரும். சோலார் அமைப்பை பராமரிப்பதும் எளிது. சோலார் தகடுகளை சுத்தம் செய்தால் போதும். இந்த நவீன சோலார் அமைப்பை ஏற்படுத்த விரும்புவோர்தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி முகமை அலுவலகங்களில் விண்ணப்பித்து 50 சதவீதம் மானியம் பெற்றுக் கொள்ளலாம்.
        

வீடுகளில் 'சோலார் பிளான்ட்அமைக்க, 50 சதவீதத்துக்கும் அதிகமாக மானியம் வழங்கப்படுகிறது, '' என தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி முகமை துணைப்பொது மேலாளர் சையது அகமது தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது : வீடுகளில் மின்உற்பத்தி செய்துவீட்டுத்தேவைக்கு மட்டும் பயன்படுத்துவோருக்கு ஐந்து கிலோவாட் வரை மானியம் உண்டு. வீட்டு கூரையின் மேல் சிறிய 'கிரிட்இணைப்புடன் கூடிய 'சோலார் பிளான்ட் ' (ஆர்.பி.எஸ்.எஸ்.ஜி.பி.,) அமைக்க எட்டு லட்ச ரூபாய் செலவாகிறது.
இதன்மூலம் ஒரு வாட்டுக்கு 90 ரூபாய் வீதம்அதிகபட்சம் நான்கரை லட்சம் வரை மானியம் கிடைக்கிறது. எரிசக்தி அமைச்சகம் ஊக்கத்தொகை வழங்குகிறது. ஐந்து கி.வாட் மின்உற்பத்தியின் மூலம் வீடுகளில் பயன்படுத்தும் ஏசி,பிரிட்ஜ்கம்ப்யூட்டர்வாஷிங் மெஷின்மின்விளக்குமின்விசிறிஉப்புத்தண்ணீர் மோட்டார்தண்ணீர் இறைக்கும் மோட்டார் அனைத்தையும் இயக்கலாம்.

  Solar_cell  : Vacuum solar water heating system on the house roof.     Solar_cell  : solar-powered cells on rooftop with blue clouded sky


முற்றிலும் மின் வாரியத்தின் தேவையிலிருந்து விலகலாம். மின்தட்டுப்பாடு என்ற பிரச்னையே ஏற்படாது. மின்சேமிப்பு 'பிளான்ட்டில்பயன்படுத்தப்படும் சில குறிப்பிட்ட போட்டோ செல்கள் 85 டிகிரி வெப்பநிலையிலும்சிறப்பாக செயல்படுகின்றன. அதற்கான தரச்சான்றும் பெற்றுள்ளன. மழைக்காலங்களில் பேட்டரி மூலம் மின்சாரத்தை சேமித்து வைத்துமூன்று நாட்கள் பயன்படுத்தலாம்.
ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் எட்டுமணி நேரம் சூரியசக்தியை ஈர்க்க முடியும். குறைவான இடவசதி : வீட்டுக்கூரை அல்லது மாடியில் 500 சதுரஅடி இருந்தால் போதும். வாரம் ஒருமுறை போட்டோ செல் பேனல்களை கழுவி துடைத்தால்சூரிய ஒளி ஈர்க்கும் திறன் குறையாது. இயக்க யாரும் தேவையில்லை. 'பிளான்ட்அமைக்க அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் உள்ளன. வெப்சைட்டில் பார்க்கலாம். முதன்முறையாகவீடுகளில் பயன் படும் சோலார் குக்கர்களுக்கான மானியம் 20லிருந்து 60 சதவீதமாகவும்வாட்டர் ஹீட்டருக்கு 50 சதவீதமும் தரப்படுகிறது.

நிறுவனங்களுக்கும் சலுகை : லாபம் ஈட்டா நிறுவனங்கள்லாபம் ஈட்டும் நிறுவனங்கள் அதிகபட்சமாக 100 கிலோவாட் வரை மின்உற்பத்தி செய்யலாம்.. அதிகபட்சமாக 90 லட்சரூபாய் மானியம் கிடைக்கிறது. லாபம் ஈட்டா நிறுவனங்கள் மானியம் போகமீதமுள்ள தொகைக்கு வங்கிகளில் கடன் பெறலாம். லாபம் ஈட்டும் நிறுவனங்கள் மானியம் அல்லது கடன் இரண்டில் ஏதாவது ஒன்றைப் பெறலாம். இத்திட்டம்16.3.2010ல் அறிவிக்கப்பட்டுள்ளதுஎன்றார் சையது அகமது.மேலும் விவரங்களுக்கு மதுரையில் உள்ள எரிசக்தி வளர்ச்சி முகமையின் அலுவலக எண்: 0452 - 253 5067ல் தொடர்பு கொள்ளலாம்.

Read more...

மின்சாரம் இல்லையா, கவலைப்படாதீர்கள்.

தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடித்த மின்சாரம் இன்று கொஞ்ச நேரம் இல்லையென்றாலும் நாம் படுகிற துயரங்கள் சொல்லத் தேவையில்லை. ஆனால், மின்சாரம் இல்லையா, கவலைப்படாதீர்கள். இருக்கவே, இருக்கிறது சூரியசக்தி. அதன் மூலம் தேவைப்படும் மின்சாரத்தை தேக்கி நம் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்'' என ஊர், ஊராக   விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது "டெடா' எனப்படும் தமிழ்நாடு எனர்ஜி டெவலப்மென்ட் ஏஜென்சி எனும் அரசு நிறுவனம்.



சூரிய சக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்யப்படுகையில் எரிபொருள் மிச்சமாகிறது. சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது. மின்கட்டணம் கட்டத் தேவையில்லை. பராமரிப்புச் செலவும் மிகவும் குறைவு. ஒரு முறை முதலீடு செய்தால் போதும், ஆயுட்காலம் வரை வேறு பணச்செலவு இல்லை.
  
அவர்களின் வாகனத்தில் சோலார் குக்கர், சோலார் வாட்டர் ஹீட்டர், சோலார் தெருவிளக்கு, வீடுகளுக்குத் தேவைப்படும் மின்சாரத்தை சேமிப்பதற்கான சோலார் மேற்கூரை, சாண எரிவாயு அடுப்பு என வகை வகையான சோலார் தொடர்பான மின் உபகரணங்கள் இருந்தன.
 டிசம்பர் 14 முதல் டிசம்பர் 20 வரையிலான மின்சார சேமிப்பு வாரத்தை முன்னிட்டு சூரிய சக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் சேமிக்கும் வழிமுறைகளைப் பற்றி மாணவர்களுக்கு விளக்கம் அளித்துக் கொண்டிருந்த "டெடா' அமைப்பின் விரிவாக்க மேலாளர் எஸ்..வெங்கட்ராமன்.  

நடமாடும் கண்காட்சி வாகனம் மூலம் தமிழ்நாடு முழுவதும் இதுவரை 10 மாவட்டங்களில் சூரியசக்தியின் முக்கியத்துவம் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். பேரணிகள் மூலமாகவும் கருத்தரங்குகள் மூலமாகவும் விளக்குகிறோம். இதற்கு மாணவ, மாணவியர் பயன்படுகிறார்கள். அதிக செலவில்லாமல் சூரிய சக்தியைச் சேமித்து அதை நம் தேவைக்கேற்றவாறு பயன்படுத்திக் கொள்ள முடியும். மின் பற்றாக்குறை உள்ள எந்த நேரத்திலும் கூட சூரியசக்தியைப் பயன்படுத்தி நலமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழலாம். இதற்கென்று பல சோலார் உபகரணங்கள் இன்று விற்பனைக்கு வந்து விட்டன.

சூரிய அடுப்பு (சோலார் குக்கர்)
 ஒரு குடும்பத்தில் உள்ள 4 பேர் மட்டும் சமைத்து சாப்பிடக்கூடிய ஒரு சோலார் அடுப்பின் விலை ரூ.3000. சமையல் எரிவாயு மற்றும் மின்சாரம் இல்லாமல் சோலார் குக்கரில் பொருட்களை வைத்து சமைத்துக் கொள்ளலாம். சுவையில் எந்த மாற்றமும் இருக்காது. மின்சாரமும் மிச்சமாகும்.

சோலார் வாட்டர் ஹீட்டர்
மின்சாரத்தின் உபயோகமின்றி தண்ணீரை சுட வைத்துக் கொள்ளலாம். மழைக்காலங்களில் இவை பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். பல பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் முக்கியமாக பொறியியல் கல்லூரிகளின் விடுதிகளிலும் அதிக அளவில் பயன்பட்டு வருகிறது.

சோலார் தெருவிளக்கு
சூரியன் இருக்கும் போது பேட்டரி சார்ஜ் ஆகிக் கொண்டு இரவு முழுவதும் எரியும் தன்மையுடையது. பள்ளி, கல்லூரிகளிலும் இதை அதிகமாக பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். கிராமங்களில் இப்போதுதான் இதுகுறித்து விழிப்புணர்வு வந்து கொண்டிருக்கிறது. ஊராட்சி மன்ற தலைவர்கள் இதை கிராமங்களில் அமல்படுத்தினால் இருளே இல்லாத கிராமமாக இருக்கும். செலவும் குறைவு.

சோலார் மேற்கூரை
தொலைக்காட்சி, மிக்ஸி, கிரைண்டர், மின் மோட்டார்கள் உட்பட அனைத்து வீட்டு உபயோகப் பொருட்களையும் இதன் மூலம் எரிய வைக்கலாம். கரண்ட் பில் கட்ட வேண்டிய அவசியம் இருக்காது. இதில் உள்ள பேட்டரி சூரிய சக்தி மூலமாக சார்ஜ் ஆகி இன்வெர்ட்டர் மூலமாக டி.சி. சப்ளையை .சி. சப்ளையாக மாற்றித் தரும் சாதனம். மின் பற்றாக்குறை காரணமாக, இதைப்பற்றி நன்கு அறிந்தவர்கள் பலரும் அவர்களது வீடுகளில் நிறுவியுள்ளனர். திருச்சி, விழுப்புரம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இதனை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை அதிகம்.

சோலார் லாந்தர் விளக்கு
இதை டார்ச் லைட் மாதிரி உபயோகித்துக் கொள்ளலாம். சூரிய ஒளிபடும் இடத்தில் வைத்து இதனை சார்ஜ் செய்து கொண்டும் பயன்படுத்த முடியும். தற்போது இந்த உபகரணமும் அதிகமாக விற்பனையாகத் தொடங்கியிருக்கிறது.

சாண எரிவாயு அடுப்பு
பழக் கழிவுகள், காய்கறிக் கழிவுகள், வீணான உணவுக் கழிவுகள், மாட்டுச்சாணம் மற்றும் மனிதக் கழிவுகள் இவற்றை பூமிக்கடியில் உள்ள கழிவுத்தொட்டி ஒன்றில் கொட்டி 15 நாட்கள் ஆன பிறகு அதிலிருந்து உருவாகும் மீத்தேன் என்ற வாயுவை பைப் மூலமாக சமையல் செய்யப் பயன்படுத்துவதே சாண எரிவாயு அடுப்பாகும். குறைந்தது 4 மாடுகள் இருந்தால் கூட அதன் சாணத்தின் மூலம் எரிவாயுவை உற்பத்தி செய்து அதன் மூலமும் மின்சாரம் எடுக்க முடியும்.

பல பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் உள்ள விடுதிகளில் சாண எரிவாயு அடுப்பைத்தான் பயன்படுத்துகின்றனர். பல லட்சங்கள் மின் கட்டணம் இவர்களுக்கு மிச்சமாகிறது.
ஒவ்வொருவரும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பயன்படுத்தி மின்சாரத்தை சேமிக்கத் தொடங்கிவிட்டால் அரசுக்குப் பல கோடி தானாகவே மிச்சமாகிவிடும். தனியாரிடம் மின்சாரத்திற்காக கையேந்த வேண்டிய அவசியமும் இருக்காது.
சோலார் தொடர்பான எந்தப் பொருளும் இன்று பல கடைகளில் விற்பனையாகும் வகையில் உற்பத்தியாளர்களும் பெருகிவிட்டனர். நம் வசதிக்குத் தக்கவாறு தேவையான பொருளை வாங்கிக் கொள்ளலாம். இவற்றைப் பயன்படுத்திட பழகிக் கொண்டால் மின்சாரம் மிச்சமாகும். மின் தடை பற்றியோ, மின் கட்டணம் அதிகமாகி விட்டது என்றோ கவலைப்படத் தேவையில்லை. பணத்தை சிக்கனமாகப் பயன்படுத்தினால், குடும்பத்திற்கு எவ்வளவு நல்லதோ அதைப்போல மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்தினால் நாட்டுக்கு நல்லது. சூரிய சக்தியைப் பயன்படுத்தி மின்சாரத்தை சேமிப்போம். இயற்கை நமக்கு வாரி வழங்கிய பரிசு தான் சூரியசக்தி; அதை முறையாகப் பயன்படுத்திக் கொள்வோம்..''என்றார்.

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets